புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த எருக்கலக்கோட்டையில் குடிநீல் பிரச்னை தீர்க்ககோரி மறியல் நடந்தது.அறந்தாங்கி ஒன்றியத்திற்குப்பட்ட ராசேந்திரபுரம் ஊராட்சியை சேர்ந்த எருக்கலக்கோட்டையில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வராமல்போனதால் எருக்கலக்கோட்டைகிராம மக்கள் காலிக்குடங்களுடன் பட்டுக்கோட்டை சாலையில் மறியல் செய்தனர்.மறியல் நடந்தபோது அங்குவந்த ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ மெய்யநாதனும் பொதுமக்களுடன்சாலையில் அமர்ந்து மறியல் செய்தார்.பின்னர் இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் விரைவில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



