சென்னை: வோடபோன் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் சிக்னல் கிடைக்காததால், வாடிக்கையாளர்கள் வேறு எவருக்கும் கால் செய்யவோ, அழைப்புகளைப் பெறவோ இயலாத படி பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
நேற்று ஏர்டெல் செல்போன் வாடிக்கையாளர்கள் இதே சிரமத்தைச் சந்தித்தனர். எவருக்கும் அழைப்புகள் செல்லவில்லை, அழைப்புகளும் வரவில்லை. இதனால் மற்றவர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் பலரும் தவித்தனர்.
முன்னர் ஜியோ போனுக்கும் இதே போன்ற பிரச்னை ஏற்பட்டது. பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப் பட்டு, வாய்ஸ் கால் சேவை மீண்டும் தொடங்கியது. நேற்றும் ஏர்டெல் சேவை மாலை நேரத்தில் படிப்படியாக சீரானது. இன்று அது போல் தொழில்நுட்பக் கோளாறால் வோடபோன் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர்.