
காவிரியிலிருந்து தண்ணீர் திறக்கமாட்டோம் எனக் கூறும் கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையாவிடம் சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்? என மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் காங்கிரஸின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரை அழைத்துக் கொண்டு போய் பேச்சுவார்த்தை நடத்தட்டும் ஏன் கிண்டல் செய்கிறீர்கள் என்று கேட்கட்டும். எங்களுக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை ஏன் திறந்துவிடாமல் இருக்கிறீர்கள் என்று கேட்கட்டும். முறைப்படி வாரியம் அமைக்கிறேன் என்பதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கேட்கட்டும். இதை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்? இதைச் செய்வதில் என்னதயக்கம் இருக்கிறது.
தமிழர்களுக்கு துரோகம் இழைப்பதில் திமுக.,வும் காங்கிரஸும் இணைந்து மிகப்பெரிய சதிச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்… என்று கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.



