திருநெல்வேலி: ஐபிஎல் போட்டிகளுக்கு இப்போது எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக, சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தமிழர்கள் ஒருவர்கூட இடம்பெறாத சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு மிரட்டல் விடுக்கப் பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் போட்டிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காவிரி விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டும் வரை, இளைஞர்களை திசை திருப்பக் கூடிய ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப் படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இந்நிலையில், சென்னை அணி வீரர்களுக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து பயங்கரவாதி போல் பேசியுள்ளார் பன்ருட்டி வேல்முருகன்.
இந்நிலையில், திருநெல்வேலியில் வடக்கன்குளம் தனியார் கல்லூரியில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது. காவிரி பிரச்னைக்காகப் போராடுபவர்களால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்கவே இந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.