
காவிரி வாரியம் தொடர்பில், தங்கள் போராட்டத்தை தொடர்ந்து தொ.ய்வின்றி நடத்திவரும் தமிழ்த் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் கூட்டாகப் பேட்டி அளித்தனர்.
இயக்குநர் பாரதிராஜா பேசியபோது, தேசியம் பேசுபவர்களால், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர முடியவில்லை, இன்று மாலை சென்னை அண்ணா சாலையில் கூடுவோம் பிரதமர் தமிழகம் வரும்போது நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம், ஐபிஎல் போட்டியை எதிர்ப்பது தார்மீகக் கடமை என்றார்.
இயக்குனர் பாரதிராஜா, தமீமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்தனர். அப்போது, கிரிக்கெட் வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை; எங்கள் உணர்வுக்கு மதிப்பலித்து அதை தள்ளிப்போடதான் நாங்கள் கூறுகிறோம்
காவிரி வாரியத்துக்காக சென்னை அண்ணாசாலையில் இன்று மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்தப்படும்.
தமிழர்களுக்கு ஆதரவாக பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செயல்பட வேண்டும்; தமிழகத்தில் பாஜக துளிர்க்க முடியாது என்று கூறினார்கள்.
இயக்குநர் அமீர் பேசியபோது மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மைதானத்திற்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
மணியரசன் பேசியபோது, தமிழகத்தில் பாஜக துளிர்க்க முடியாது; மம்தா பானர்ஜி போல் தமிழக முதலமைச்சர் துணிவுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.



