ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கறிஞர் பிரேம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் குடும்பத்தினருடன் பயணித்த 9 வயது சிறுமிக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் ஒரு நடுத்தர வயது நபர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் டிக்கெட் பரிசோதகரிடம் அளித்த புகாரை அடுத்து, அந்த நபர் ஈரோடு ரயில்வே போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்றும் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிட்டவர் என்றும் தெரியவந்தது. இதை அடுத்து, பிரேம் ஆனந்த் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.