ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா? அப்பலோவால் கடுப்பான நீதிபதி!

Bangalore woman claiming daughter of Jayalalithaa and case - 2026

சென்னை: ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா என்று கேட்டுள்ள உயர் நீதிமன்றம், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்…

‘‘ஜெயலலிதாவின் உடலை எங்கள் குல வழக்கப்படி இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்ய வேண்டும். எனவே அவரது உடலைத் தோண்டியெடுத்து மத சம்பிரதாயப் படி இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கைகளை வைத்திருந்தார்.

ஆனால், அம்ருதா தாக்கல் செய்த இந்த வழக்கை ஏற்கக்கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அம்ருதாவின் மனுவுக்கு அரசுத் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரனைக்கு வந்தது. மேலும், அதிமுக உறுப்பினரான ஜோசப், ஜெயலலிதாவின் உறவினர்களான தீபக், தீபா மற்றும் மகள் என்று கூறிக் கொள்ளும் அம்ருதா ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்காகவே இந்த வழக்கை தொடர்ந்திருக் கின்றனர் என்றும், எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதனிடையே, ஆர்.கே.நகர் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே வழக்கு தொடரப்பட்டதாகவும், டிஎன்ஏ சோதனை தேவையில்லை எனவும் அரசுத் தரப்பு கூறியது. அப்போது அப்போலோ நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் மாதிரிகள், ரத்த மாதிரிகள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ரத்த மாதிரிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க கால அவகாசம் தேவை என அப்போலோ தரப்பில் அவகாசம் கேட்டப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இனி இணைப்பு மனுக்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாளைக்குள் அப்போலோ நிர்வாகத்திடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories