அரசு வழக்கறிஞர்களை அரசியல் காரணங்களுக்காக நியமிக்கக் கூடாது: நீதிமன்றம்

Madras High Court in Chennai - 2026

சென்னை: அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படக் கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறைகளுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் நியமனம் குறித்த விதிகளை தமிழக அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையில்லை எனக் கூறி, அந்த விதிகளை ரத்து செய்யுமாறும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் வழக்கறிஞர் வசந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்காமல் அரசு தலைமை வழக்கறிஞரே தேர்வு செய்து நியமிக்கிறார் என மனுதாரர் குற்றம் சாட்டினார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஆனால், அரசு தலைமை வழக்கறிஞர் தமிழக அரசுக்கு அனுப்பும் பட்டியலில் இருந்து தலைமை வழக்கறிஞர், பொதுத்துறை, உள்துறை மற்றும் சட்டத் துறை செயலாளர்கள் அடங்கிய குழு தேர்ந்தெடுத்து அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ள விதிகள், நியமன விதிகளாகவே உள்ளன என்றும், நியமன நடைமுறைகளுக்கான விதிகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டனர். எனவே, விண்ணப்பங்களை வரவேற்று, தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான நடைமுறை விதிகளை வகுத்து வெளியிட வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்யக் கூடாது எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories