ராமநாதபுரம்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக, நேற்று பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிக்குடி கிராமத்துக்கு வருந்த நிர்மலா சீதாராமனுக்கு கிராம மக்கள் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர், கிராமத்தைச் சேர்ந்த 3 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு வளையல்கள் அணிவித்து நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து கூறினார்.
கள்ளிக்குடி கிராமத்தில் அப்பகுதிப் பெண்கள், நிர்மலா சீதாராமனிடம் தங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஒரு குடம் குடிநீர் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்குவதாகவும் கூறினர். இதைக் கேட்டு, உடனடியாக கிராமத்துக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டார். அதன் பின்னரும் குடிநீர் வரவில்லை எனில், தனக்கு மெஸேஜ் அனுப்பும்படி கிராம மக்களிடம் கூறினார்.
Under Ujala Scheme, Smt @nsitharaman distributed LED bulbs in Kallikudi Panchayat, Ramanathapuram. This will promote energy efficiency and will reduce the electricity bills of households. pic.twitter.com/2AQGlkCI4T
— Raksha Mantri (@DefenceMinIndia) May 2, 2018
தொடர்ந்து கள்ளிக்குடி, கலையூர் கிராமங்களில் நடந்த விழாக்களில் பங்கேற்ற அவர், முத்ரா வங்கிக் கடன் உதவி, இலவச கேஸ் அடுப்பு, இலவச எல்.ஈ.டி பல்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பரமக்குடி துணை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலை குறித்து கேட்டறிந்தார்.
அமைச்சருடன் மத்திய அரசு வழிகாட்டுதல் அலுவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், பா.ஜ.க மாநில துணைத் தலைவர்கள் குப்புராமு, சுப.நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், ஆத்மகார்த்தி, சண்முகராஜா உள்ளிட்ட பாஜ., கட்சியினரும் பங்கேற்றனர்.
Tea at Shiva Kumar’s, President, Kalayur Panchayat. Amritam, the elder, shows off the typical hair knot of the south TN region. Another typical of this area- the heavy ear studs that drag down the lobes. Graceful & warm people . @BJP4TamilNadu @BJP4India #GramSwarajAbhiyaan pic.twitter.com/G3hML3WlNc
— Nirmala Sitharaman (@nsitharaman) May 2, 2018
It’s very heartening that we have a peple-friendly, particularly women-friendly Central Govt.
மஙà¯à®•ளகரமான வரவ௠,தஙà¯à®•ள௠வரவ௠நலà¯à®µà®°à®µà®¾à®•à¯à®•