தினகரனால் கைவிடப் பட்ட அதிமுக., அம்மா அணிக்கு உயிர் கொடுத்து, மீண்டும் இரட்டை இலை மீட்பு, அம்மா அணி என்றெல்லாம் கூறிக்கொண்டு அரசியல் செய்யக் கிளம்பியிருக்கும் திவாகரன், நேற்று சென்னை ராயபுரத்தில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை துவங்கினார்.
அம்மா அணியின் முதல் சுற்றுப் பயணம் என்ற பிரசாரத்துடன், தனது சுற்றுப் பயணத்தை தொடங்கிய திவாகரன், தற்போது மாறிவிட்ட சூழலில் தினகரனை ஒரு பிடி பிடித்தார். ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றது எப்படி தெரியுமா என்ற ரகசியத்தைச் சொல்வது போல் ஒரு தகவலைச் சொன்னார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முந்தைய நாள், அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் அந்த வீடியோ குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்தது.
இந்நிலையில், சசிகலா மறைத்து வைத்திருந்த ஜெயலலிதாவின் மருத்துவமனை சி.டியை திருடி வெளியிட்டு டிடிவி.தினகரன் வெற்றி பெற்றார் என்று திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஜெயலலி