நீட் தேர்வு கெடுபிடிகளை கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு முறைகேடுகளுக்கு துணை போகிறார்கள் அறிக்கைப் புலிகள் என்றும், அவர்கள் கண்டிக்கப் பட வேண்டியவர்கள் என்றும் கூறியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்… உழைப்பாலும் திறமையாலும் முன்னுக்கு வரும் நம்மாணவர்களை பாதுகாக்க வந்த கட்டுப்பாடுகளை ஏதோ நம் மாணவர்களுக்கு எதிரான கெடுபிடிகள் போலவா இதனைச்சித்தரிப்பது?நம் மாணவ சமுதாயத்தை நேர்வழியில் செல்லாமல் குறுக்குவழி காட்டும் அரசியல்வாதிகளும் அறிக்கைப்புலிகள் தான் கண்டிக்கப்படவேண்டியவர்கள். – என்று கூறியுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவு:
உழைப்பாலும் திறமையாலும் முன்னுக்கு வரும் நம்மாணவர்களை பாதுகாக்க வந்த கட்டுப்பாடுகளை ஏதோ நம் மாணவர்களுக்கு எதிரான கெடுபிடிகள் போலவா இதனைச்சித்தரிப்பது?நம் மாணவ சமுதாயத்தை நேர்வழியில் செல்லாமல் குறுக்குவழி காட்டும் அரசியல்வாதிகளும் அறிக்கைப்புலிகள் தான் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 7, 2018