புழுதிப் புயல் தில்லி மற்றும் ஹரியானாவை கடுமையாகத் தாக்கியதாக ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னர் மத்திய அரசு இன்று புழுதிப் புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. தில்லி உள்ளிட்ட 13 மாநிலங்களில் புழுதிப் புயல் வீசக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இரவு புழுதிப் புயல் தாக்கியுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு 13 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் புழுதிப்புயல் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Posts by Senkottai Sriram:
- சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
- காணாமல் போன நயா பைசா கணக்கு!
- Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!
- அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!
- தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்; ஜன.26 ஸ்பெஷல்!



