தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கோபால் ரெட்டியின் மகன் பார்கவ் ரெட்டி (வயது 47) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நடிகர் விஷாலின் சகோதரர் முறை உறவினர்.
சென்னையில் வசித்து வந்தார் பார்கவ் ரெட்டி. இவர் பார்கவ் ஆர்ட் ப்ரொடக்ஷன் நிறுவன அதிபர். சன்னாரெட்டி பார்கவ் ரெட்டி என்று அறியப்பட்ட இவர், திங்கள்கிழமை நேற்று தனது கோழிப்பண்ணை பணியாளருடன் பேசுவதற்காக வாகாடு மண்டலில் உள்ள பம்பாலி கடற்கரைப் பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இன்று காலை அவரது சடலம் கடற்கரைப் பகுதியில் கிடந்துள்ளது.
அவரது மரணத்துக்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று போலீஸார் கூறியுள்ளனர். இந்த மர்ம மரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் போலீஸார்.
![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2018/05/bhargavReddy.jpg?resize=300%2C289&ssl=1)
எஸ். கோபால ரெட்டி, 80களில் பல ஹிட் படங்களை தயாரித்தவர். என்.பாலகிருஷ்ணாவுடன் இணைந்து பல படங்களைத் தயாரித்தவர். கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் ஹிட் ஆன படங்கள் பல. மகன் பார்கவ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களைத் தாரித்திருந்தாலும், கடந்த 2008ல் கோபால ரெட்டி காலமான பின்னர், இந் நிறுவனம் படங்கள் எதையும் தயாரிக்கவில்லை.
இந்நிலையில், நடிகர் விஷால் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ‘இருப்புத்திரை’ ரிலீஸாகிறது. இன்று மர்மமான முறையில் உயிரிழந்த பார்கவ் ரெட்டி, நடிகர் விஷாலின் சகோதரர் முறையினர். இதனால், விஷாலின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பார்கவ் ரெட்டி மரணம் குறித்து விஷால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில் ‘ பார்கவ், உன் வாழ்வு அதற்குள் முடிந்து விட்டதா. இருக்கவே முடியாது. நான் என் சொந்த சகோதரனை இழந்து விட்டேன். என்னால் இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. உன்னை தொலைத்து விட்டேன். நான் குழப்பத்தில் இருக்கிறேன். நீ ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாய். உனக்கு என்ன பிரச்னை இருந்தாலும் என்னிடம் கூறியிருக்கலாமே. அதை தீர்த்திருப்போமே. நான் அழுது கொண்டிருக்கிறேன்… என்று டிவிட்டர் பதிவில் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார்.
Bhargav.i wish u didn’t end your https://t.co/YD4je0JFfH way.i lost my own brother.i will Neva get over this guilt.i am https://t.co/gXNAjsHFQO btw all this chaos. I take to Twitter to say I miss u man.why the hell.i wud hav sorted out your issues too.i cry as I msg
— Vishal (@VishalKOfficial) May 8, 2018
பார்கவ் ரெட்டியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விஷால் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.