தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்டபட்ட பகுதிகளிலுள்ள பள்ளிவாகனங்கள் வருடாந்திர தணிக்கை இன்று தென்காசியில் நடைபெற்றது,இதில் 173பள்ளி வாகனங்கள் தணிக்கைக்கு வந்தன.இதனை தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் ,தென்காசி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்த் பணியில் இருந்து ஒவ்வெரு வாகனமாக ஆய்வு மேற்கொண்டார்.163 வாகனங்கள் அனைத்து முறைகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.தீயணைப்பு கருவி,முதலுதவி பெட்டி,தாழ்நிலை படிக்கட்டுக்கள்,அவசரகால கதவுகள்,ஜன்னல் கம்பிகள் உள்ளிட்டவை தணிக்கை செய்தார்கள் இந்த தணிக்கையில் 10 தனியார் பள்ளி பேருந்துக்கள் மட்டும் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் அவைகளை முறையாக பராமரிப்பு செய்தபின்னதான் தணிக்கை செய்யமுடியும் என கூறி திருப்பியனுப்பினர்.



