தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ளதால் குற்றாலம் சீசன் முன்கூட்டியே துவங்கியது.
கடந்த சில வாரங்களாக அக்னிநட்சத்திரம் வெப்ப மக்களை வாட்டி வதைத்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தென் மாவட்டத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வந்தது.
தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் நேற்று இரவு நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, குற்றாலம் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
இதே போல இன்றும் காலையும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் குற்றாலம் அருவியில் குறைந்த அளவு தண்ணீர் விழுந்தது. மாலையில் மழை தொடர்ந்ததால் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.




IT HAS ALREADY RAINED IN SEVERAL CRORES IN CHIDAMBARAM, VAIKO, STALIN AND OTHERS FOREST . SEE FACE BOOK OF 30/5/14. WHY DID THESE PEOPLE MADE A DRAMA , CHEATED THE PUBLIC AND SACRIFICED THE LIVES ? WILL ANY IGNORANT TAMIL ORGANISE A PROTEST ON THIS ISSUE.