வட தமிழகத்தில் கன மழை கொட்டப் போகுது… உஷார்..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

weather rain - 2026

சென்னை: வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென் மேற்குப் பருவக் காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்கக் கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும் கிழக்கு திசைக் காற்றும் மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி, தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அடுத்த இரு தினங்களில் வட தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 thought on “வட தமிழகத்தில் கன மழை கொட்டப் போகுது… உஷார்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.