
நெல்லை மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் சீஸன் இப்போது களை கட்டியுள்ளது. அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க வசதியாக மிதமான தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது வெயில் தலை காட்டினாலும், சாரலின் இனிமையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்தபடி செல்கின்றனர்.
இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், தொடர்ந்து சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்கள் என்பதாலும் குற்றாலத்துக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.



