ஆளுநரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் மாஸ்டர் பிரக்யானந்தா

Published:

chess pragyananda governor - 2026சென்னை: கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தா தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இத்தாலி நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவன் பிரக்ஞானந்தாவை, அழைத்து பாராட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

கிரிடின் ஓபன் (Gredine Open) செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 12 வயது மாணவன் பிரக்ஞானந்தா, அதிக புள்ளிகள் பெற்று  கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். சென்னை திரும்பிய அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்திய பிரக்ஞானந்தாவை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வாழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். உறவினர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஆளுநரை சந்தித்த‌து மகிழ்ச்சி அளித்த‌தாக மாணவர் பிரக்ஞானந்தா கூறினார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img