
சென்னை: இந்த வருடத்தின் மிஸ் இந்தியா பட்டம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ். அவர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பதிவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், 2018-ஆம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி அனுக்ரீத்தி வாஸ் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.



