ஜூலை 9 திங்கள் முதல் கொல்லம்-செங்கோட்டை பாசஞ்சர் இயக்கம்

செங்கோட்டை: வரும் திங்கள் 09/07/18 முதல் ஒரு பாசஞ்சர் ரயில் தினசரி் செங்கோட்டை கொல்லம் & கொல்லம் செங்கோட்டை இடையே இயக்கப்படும்.

ஒரு ரயில்(ரயில் எண் 56335) செங்கோட்டையிலிருந்து காலை 11.25 க்கு புறப்பட்டு மாலை 3.40 க்கு கொல்லம் போய் சேரும்.

அதே போல மற்றொரு ரயில் (ரயில் எண் 56336) கொல்லத்திலிருந்து காலை 10.30க்கு புறப்பட்டு பகல் 02.35க்கு செங்கோட்டைவந்து சேரும்.

இந்த ரயில்கள் செங்கோட்டை கொல்லம் இடையே கீழ்க்காணும் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
1)பகவதிபுரம்
2)ஆரியங்காவு ஹால்ட்
3)நியூ ஆரியங்காவு
4)இடப்பாளையம்
5)கழுதுவரட்டி
6)தென்மலை
7)ஒத்தக்கல்
8)இடமன்
9)புனலூர்
10)ஆவணீஸ்வரம்
11)குறி ஹால்ட்
12)கொட்டாரக்கரை
13)எழுகோன்
14)குண்டரா ஈஸ்ட்
15)குண்டரா
16)சந்தனத்தோப்பு
17)கிளிக்கொல்லூர்
18)கொல்லம்.

அதுபோல் வரும் திங்கள் 09/07/18 முதல் பாலக்காடு புனலூர் பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்கப்படும்.

பாலக்காட்டில் புறப்படும் ரயில் வண்டி எண் 16792 செங்கோட்டைக்கு அதிகாலை 03.45 க்கு‌வந்து சேர்ந்து 03.50க்கு திருநெல்வேலிக்கு‌ புறப்பட்டு திருநெல்வேலியை காலை 06.30க்கு அடையும்.

மறு மார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் ரயில் எண் 16791 திருநெல்வேலியில் இரவு 10.30க்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு நள்ளிரவு 12.30க்கு வந்து 12.35க்கு பாலக்காட்டிற்கு புறப்படும்.

கூடிய விரைவில் நான்கு இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்படும்.

இதனை ரயில்வே அதிகாரிகள் குறிப்பை மேற்கோள் காட்டி செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் கே.ஹெச்.கிருஷ்ணன் நம்மிடம் தெரிவித்தார்.