
நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள 10 வது வார்டில், நகராட்சிக்கு சொந்தமாக செயல்பட்டு வருகிறது 13 வது வார்டு பள்ளி. துவக்க பள்ளியாக இருந்ததை நடுநிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதனால் பள்ளிக்கு கூடுதல் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர். இதன்படி கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட ரூ. 10 லட்சம் ஒத்துக்கீடு செய்தார். கடந்த சில மாதங்கள் நடைபெற்று வந்த பணி தற்போது முடிவடைந்தது.
இந்த நிலையில், அப் பள்ளியில் உள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பண்டியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கட்சி நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



