சென்னை: சென்னை கோபாலபுரம் சென்ற எந்தத் தலைவர்களுக்கும் கருணாநிதியை நேரில் சந்திக்க அனுமதிக்கவில்லை.
கோபாலபுரம் இல்லம் சென்ற எந்த தலைவர்களும் கருணாநிதியை நேரில் சந்திக்கவில்லை. நோய் தொற்று இருப்பதால் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்ற அமைச்சர் குழு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் என பலரும் கோபாலபுரம் சென்றிருந்தனர்.
ஆனால், யாருமே கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவில்லை. ஸ்டாலினிடம் பேசி திரும்பினர். கருணாநிதிக்கு நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருந்ததால், அவர்கள் நேரில் சந்திக்க முடியவில்லை.




