நாகை பகுதிக்கு வெள்ளிக்கிழமை இன்று காவிரி நீர் வந்தது. அதுவும் ஆடி வெள்ளிக் கிழமை என்பதால், பெண்கள் பூரித்துப் போயினர்.
தமிழகத்தின் கடைக்கோடிப் பகுதிக்கு காவிரி நீர் வந்தடைந்ததில்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தற்போது தஞ்சை திருவாரூர் மாவட்டங்கள் வழியாக நாகை மாவட்டம் இறையான்குடிக்கு வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் நெல்மணிகளைத் தூவி வரவேற்றனர்.
பெண்கள் கும்மியடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாசன ஆறுகள் வாய்க்கால்களில் தண்ணீர் வருவதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆண்டு வரும் ஆடிப்பெருக்கை ஆற்றில் குளங்களில் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா கடைமடவ்ப் பகுதி முழுவதும் இரண்டு தினங்களில் தண்ணீர் வந்து விடும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.




