பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (மே 6) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. வருகிற 2015-16ஆம் கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் தொடங்க உள்ளது. மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 60 மையங்கள் மூலம் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் மே 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. இருந்தபோதும் அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன்ற்ய்ங்ஹ என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.
பி.இ. மாணவர் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari