சிலைக்கடத்தல் பிரிவு போலீஸாரால் இணை ஆணையர் கவிதா அதிரடி கைது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

hrnce kavitha - 2026

கும்பகோணம்: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீண்டும் அதிரடி காட்டியுள்ளனர். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் திருப்பணிப் பிரிவு இணை ஆணையராக பணியாற்றி வந்த கவிதா கைது.

கவிதா ஏற்கெனவே பழனி தண்டாயுதபாணி கோவிலில் நகைகள் சரிபார்ப்பு பிரிவின் இணை ஆணையராக பணியாற்றினார். பழனி தண்டாயுதபாணி கோவிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு வழக்கில் இன்று காலை கவிதாவை சிலைகள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

கவிதாவை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று மாலை போலீசார் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.