நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி செங்கோட்டை வந்தார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த தோனி இன்று நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நெல்லை வந்தார்.
பின்னர் கார் மூலம் செங்கோட்டை வந்தார். அங்கிருந்து குண்டாறு அணை அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஒய்வெடுத்தார்.
பின்னர் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், குண்டாறு அணைக்கு மேலே உள்ள தனியார் அருவிக்கு குளிப்பதற்காக ஜீப்பில் சென்றார்.
தோனி வந்தது குறித்து தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் தனியார் விடுதியில் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




