சென்னை: திமுக., தலைவரும் முன்னாள் முதல்வருமான திருக்குவளை மு. கருணாநிதி செவ்வாய்க்கிழமை இன்று மாலை 6.30 மணி அளவில் காலமானதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதை அடுத்து, அவரது இறுதிச் சடங்குகள் ராஜாஜி அரங்கில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர், 5 முறை தமிழகத்தை ஆட்சி செய்தவர் என்பதால், கருணாநிதி மறைவுக்கு அரசு விடுமுறையாக நாளை(8.8.18) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
நாளை, நாளைமறுநாள் நடக்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




