சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதீர்கள் என திமுக., நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகக் தலைவர் கருணாநிதி காலமான நிலையில் உணர்ச்சிப் பெருக்கில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.




