சென்னை: மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரும் தேசிய தலைவர்கள் மற்றும் பிற மாநில தலைவர்களின் விவரம்!
*பிரதமர் நரேந்திரமோடி தனி விமானத்தில் காலை 10.15 மணிக்கு டில்லியிலிருந்து சென்னை வருகிறாா்.
*மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிா்மலா சீத்தாராமன் காலை 10.15 மணிக்கு டில்லியிலிருந்து சென்னை வருகிறாா்.
*கா்நாடகா முதலமைச்சா் குமாரசாமி காலை 11.30 மணிக்குத் தனி விமானத்தில் பெங்களூரிலிருந்து சென்னை வருகிறார்.
*தெலுங்கானா முதலமைச்சா் சந்திரசேகா் ராவ் காலை 10.30 மணிக்குத் தனி விமானத்தில் ஹைதராபாத்திலிருந்து சென்னை வருகிறார்.
*கேரளா முதலமைச்சர் பினாராய் விஜயன் பகல் 1.15 மணிக்குத் தனி விமானத்தில் சென்னை வருகிறாா்.
*ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகல் 2.15 மணிக்குத் தனி விமானத்தில் சென்னை வருகிறாா்.
*உ.பி.முன்னாள் முதலமைச்சர் அகிலேஸ் யாதவ் பகல் ஒரு மணிக்கு லக்னோவிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
*காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத்,வீரப்பமொய்லி ஆகியோர் பகல் 12.40 மணி விமானத்தில் டில்லியிலிருந்து சென்னை வருகின்றனர்.




