செங்கோட்டையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொட்டும் மழையில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலம் நடந்தது.
திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் நகர திமுக சார்பில் அனைத்து கட்சிகளின் மெளன ஊர்வலம் தாலுகா அலுவலகம் அருகே கொட்டும் மழையில் தொடங்கியது.
ஊர்வலத்திற்கு திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ் தலைமை தாங்கினார். கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் வழக்குரைஞர் ஆபத்துகாத்தான் முன்னிலை வகித்தார்.
மவுன அஞ்சலி ஊர்வலத்தில் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ண முரளி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் மோகனகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதிமூலம், பா.ஜ., நிர்வாகி கல்யாணகுமார், சிபிஐ தாலுகா செயலாளர் மாரியப்பன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ். அ.ம.மு.க எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தஸ்ரின் பாபு, நகர செயலாளர் முத்தையா, தேமுதிக மாவட்ட துணை தலைவர் கண்ணன், தமுமுக மவுலா பிலிசா, எஸ்டிபிஐ நகரத்தலைவர் அஸ்தர் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளர் பசீர் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மெளன ஊர்வலம் பேருந்து நிலையம், தபால் நிலையம், போலீஸ் ஸ்டேசன், வம்பளந்தான் முக்கு வழியாக மீண்டும் தாலுகா நிலையம் வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கருப்பு பேடஜ் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



