சென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார் திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா.
இரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில் கட்டியாண்ட இருவருக்குள்ளும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. 1989ல் திமுக, ஆட்சியில் இருந்த போது, ஜெயலலிதாவின் சேலைத் தலைப்பை பிடித்திழுத்து ரகளை செய்து, சட்டமன்ற வரலாற்றில் ஓர் அசிங்கத்தை திமுக.,வினர் அரங்கேற்றினர். தலைவிரிகோலமாக ஜெயலலிதா வெளியே ஓடி வந்த அந்தப் புகைப்படங்கள் அப்போது அவருக்குப் பெரும் அனுதாபத்தைத் தோற்றுவித்தது.
தொடர்ந்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, திமுக.,வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பின்னர் 1996ல் வந்த திமுக., ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகளைப் போடுவதில் முனைப்பு காட்டியது. தொடர்ந்து அவரை சிறையில் தள்ளுவதில் உன்னிப்பாக இருந்தது.
அடுத்து ஜெயலலிதா வந்த போது திமுக; தலைவரை நள்ளிரவுக் கைதில் தள்ளியது. தொடர்ந்து பழிவாங்கல்களும், ஒருவரை ஒருவர் விரோதிகளாய்ப் பார்ப்பதும், இரு கட்சிகளுக்குள்ளும் மற்ற கட்சியிடம் யாராவது தொடர்பு கொண்டிருந்தாலோ, பார்த்துப் புன்னகைத்தாலோ கூட பழி வாங்கப் படுவதும் சகஜமாக இருந்தது.
இப்படி எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகளுக்குள்ளும் ஜெயலலிதா மறைவின் பின் ஒரு சுமுக நிலை வந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசத் தொடங்கினர். கருணாநிதிக்காக அதிமுக.,வினரிடம் நேரடியாகப் பேசும் அளவுக்கு அதிமுக.,வினரிடையே இருந்த திரைகள் அகன்றன.
இப்படி எதிரும் புதிருமாக இருந்தாலும், இறப்பில் இருவரும் ஒற்றுமைய வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கருணாநிதிக்காகவே அரசியலில் இருப்பதாக ஜெயலலிதா சொன்னார். ஜெயாலலிதா அரசியலை எதிர்கொள்வதே தன் அரசியல் என்று தன் கடைசிக் கட்டத்தில் மாறிப் போனார் கருணாநிதி. ஜெயலலிதா மறைந்த பின், கருணாநிதி மௌனியானார். ஓய்வறியாமல் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய கருணாநிதிக்கு உடல் நலன் இயற்கையில் அதைச் செய்தது!
இப்படி சில விநோதங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் போது, இன்னோர் அம்சமாய் அவர்கள் இருவரது இறப்பு தேதி அமைந்தது.
ஜெயலலிதாவின் இறப்பு நாள் கூட்டலும் , கருணாநிதியின் இறப்பு நாள் கூட்டலும் ஒன்றாக அமைந்தது. நியூமராலஜி பார்ப்பவர்கள் இதையும் கண்டறிந்து அதிசயிக்கின்றனர்.
ஜெயலலிதா மறைந்தது – 5.12.2016 இல்! இதன் கூட்டுத் தொகை =2033
அதுபோல், கருணாநிதி மறைந்தது 7.8.2018 இதன் கூட்டுத் தொகை 2033.
இந்த இரு எண்களின் கூட்டுத் தொகை அதாவது 2+0+3+3 = 8. எண் எட்டு என்பது சனைச்சரனுக்கான எண் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?




