ஒவ்வொரு கட்சியிலயும் அந்த அந்த கட்சி ஆதரவாளர்கள்தான் நிரம்பியிருப்பாங்க… ஆனா, தமிழக பாஜக.,வுல மட்டும் மற்ற எல்லாக் கட்சி ஆதரவாளர்களும் இருப்பாங்க… பாஜக., ஆதரவாளர்களைத் தவிர!
இன்று சமூக வலைத்தளங்களில் இப்படி ஒரு விவாதம் நடக்க, அக்கட்சியினரின் கடந்த சில நாட்களின் செயல்பாடுகள் காரணமாகியிருக்கின்றது. என்றைக்கு தமிழக பாஜக., உண்மையில் பாஜக., ஆதரவாளர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும்? இந்தக் கேள்வி பலரது மனங்களில் இருக்கின்றது.
அதன் ஒரு வெளிப்பாடாக… Prakash Ramasamy எழுதிய ஒரு சிந்தனை…
நீங்க எந்த பிரிவு பாஜக..?
நாங்க திராவிட ஆதரவு பாஜக..
ஓ.. நீங்க..
இல..
புரிஞ்சது இலை ஆதரவு பாஜக..
நீங்கசார்..?
நான் தாஞ்சாமி..
தெரியுஞ்சாமி சொல்லுங்க..
நான் டோக்கன் அம்மா திராவிட ஆதரவு பாஜக..
யாராவது கம்யூனிஸ்ட் ஆதரவு பாஜக இருக்காங்களா..?
இல்லீங்க கம்யூனிஸ்டுகளை பாத்தே வருஷக்கணக்காவுது.. செவப்பு துண்டு ஏதாவது மண்டையப்போட்டா.. ஆதரவு சத்தத்தை வச்சி ஈஸியா கண்டுபிடிச்சிடலாங்க.. அவரு கம்யூனிஸ்ட் ஆதரவு பாஜகன்னு..
ஓ..! செம்ம..
காங் ஆதரவு பாஜக யாராவது..?
உங்களுக்கு ஒண்ணுமே புரியலீங்க.. ஆல்மோஸ்ட் எல்லோருமே காங் ஆதரவு பாஜக தாங்க.. அவங்க இல்லைன்னா நாங்க இல்லைங்க..
அவங்களும் இங்க இல்லை.. அதான் நீங்களும் இல்லை அதான சொல்ல வரீங்க..?
அவ்வ்வ்வ்
சூப்பர். அப்ப பாஜக ஆதரவு பாஜக..?
ஒரே ஒருத்தர்தாங்க.. தினமும் எல்லார்ட்டயும் வசவு வாங்கிகினாலும் விடாம பேசறார் பாருங்க அவர் ஒருத்தர்தான்..இது அவரோட அட்மின்.
ஒருத்தராவது இருக்காங்களே.. பரவால்ல.. நல்ல எதிர்காலம் இருக்குங்க.. கட்சிக்கு.. மிஸ்டு கால் கொடுத்து வளரும் கட்சின்னு பாத்தா..காலை வாரும் கட்சியால்ல இது தெரியுது.
இல்லீங்க தாமரை மலரும்..
*^%#%^~€^*# மலரும்.
எதுவும் சொல்லிராதீங்க.. எல்லாரும் இத சொல்லிட்டாங்க.. வேணாங்க.. விட்ருங்க..




