புது தில்லி: தமிழகத்தில் மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்தத் தகுந்த நகரங்கள் பட்டியலில், திருச்சி முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்துதான் சென்னை உள்ளிட்ட நகரங்கள் உள்ளன. முக்கியமாக மதுரை பின்தங்கியுள்ளது.
மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்துவதற்கு வசதியான நகரங்கள் பட்டியலில், மஹாராஷ்டிராவில் உள்ள புனே, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் திருச்சி 12வது இடத்தையும், சென்னை 14வது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் கவலையின்றி வாழ்க்கை நடத்துதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் திருச்சியே முதலிடம் பிடித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் நிர்வாகம், சமூக, பொருளாதார, அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மக்கள் எளிதாக வாழத் தகுந்த நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்டார்.
இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் புனே, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள் பிடித்தன. ஆந்திர மாநிலம் திருப்பதி, பஞ்சாப் மாநிலம் சண்டிகர், மஹாராஷ்டிர மாநிலம் தானே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழக நகரங்கள் முறையே திருச்சி 12; சென்னை 14; கோவை 25; ஈரோடு 26; மதுரை 28, திருப்பூர் 29 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் நாட்டின் தலைநகர் புதுதில்லி 65 ஆவது இடத்தை பிடித்தது. 111 நகரங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.





மகà¯à®•ள௠வாழà¯à®•à¯à®•ை நடதà¯à®¤ தமிழà¯à®¨à®¾à®Ÿà¯à®Ÿà®¿à®²à¯ à®®à¯à®¤à®²à®¿à®Ÿà®¤à¯à®¤à®¿à®²à¯ நம௠திரà¯à®šà¯à®šà®¿ உளà¯à®³à®¤à¯ எனà¯à®± மதà¯à®¤à®¿à®¯ அரசின௠சாரà¯à®ªà®¿à®²à¯ வெளியிடபà¯à®ªà®Ÿà¯à®Ÿ படà¯à®Ÿà®¿à®¯à®²à¯ சொலà¯à®•ிறதà¯, சநà¯à®¤à¯‹à®·à®®à®¾à®¯à®¿à®°à¯à®•à¯à®•à¯.