நெல்லை: கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் செங்கோட்டை மலைப் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீர் விழுகிறது. பழைய குற்றால அருவியில் நடை பாதையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஐந்தருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இரண்டாவது நாளாக இன்றும் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.




