
சென்னை: குட்கா ஊழல் தொடர்பான சிபிஐ.,யின் விசாரணை தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், குட்கா ஊழல் நடந்தபோது உள்ள அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டார். மேலும் சில விவரங்களையும் கூறினார்.
அந்த விவரங்களைத் தருமாறு ஜார்ஜிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. 2011 முதல் 2015 வரையிலான கால கட்டத்தில் பணிபுரிந்ததாக பல்வேறு அதிகாரிகளின் பெயர்களை ஜார்ஜ் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப் படுகிறது.



