புளியங்குடி: தமிழக அரசு இந்த முறை பல்வேறு கெடுபிடிகள் விதித்ததால், விநாயகர் சதுர்த்தி விழா களை இழந்து போயுள்ளது. இருப்பினும், எப்பாடு பட்டாவது நாங்கள் சதுர்த்தி விழாவை நடத்தியே தீருவோம் என பல இடங்களில் இந்து இயக்கத்தினர் பலர் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியுள்ளார்கள்.
அந்த வகையில், புளியங்குடி , கற்பக வீதியில் ,EB, போலீஸாரின் அராஜகத்தினால் மின்சார வசதியில்லாமல் அரிக்கோன் லைட் மூலமாக விநாயகர் தரிசனத்துக்கு வெளிச்சத்துக்காக விளக்கு எரிய வைத்துள்ளனர். இந்தக் காட்சியைக் கண்ட பலர் வயிறு எரிந்து அரசுக்கு சாபம் இட்டுச் சென்றதைக் காண முடிந்தது.




