புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டு வருகிறது.
இதையொட்டி புதுச்சேரியில் பிரசிக்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
மேலும் மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப் பட்டுள்ளது. சிறப்பு பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து நின்று விநாயகப் பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.




