நீலகிரி மாவட்டத்திற்குள் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவுவதை தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகன சோதனை, கேரளா தமிழ் நாடு எல்லை பகுதி களில் M.S.T மற்றும் STF படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட எஸ்பி., சண்முகபிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் குன்னூர் அருகேயுள்ள ‘நெடுகல்கம்பை’ ஆதிவாசி கிராமத்திற்கு வந்தனர். ஒரு பெண் உட்பட 6க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் வந்து அப்பகுதி மக்களிடம் உணவுகள் வாங்கி உண்டு பல மணி நேரம் அங்கு தங்கியிருந்துவிட்டு, பின்னர் காட்டுக்குள் சென்று மறைந்தனர்
இதனைத் தொடர்ந்து அப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தியும் மாவோயிஸ்டுகள் சிக்கவில்லை. இதை அடுத்து நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அன்று முதல் அனைத்து காவல் நிலையங்களிலும் புகைப்படத்துடன் மாவோஸ்ட் குறித்த அறிவிப்புகள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக பதவியேற்ற எஸ்பி., சண்முகப்பிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது 100 சதவீதம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை; இருப்பினும் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க N.S.T 3 குழுக்கள் மற்றும் S.T.F படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினந்தோறும் தமிழ்நாடு கேரளா எல்லை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். நீலகிரி மாவட்டத்தில் கேரளா எல்லை பகுதிகளும் கர்நாடக எல்லை பகுதிகளும் சேர்வதால் அப்பகுகளில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆதிவாசி மக்களிடம் சந்தேகப்படும் புதிய நபர்கள் யாராவது தென் பட்டால் உடனடியாக காவல் துறையினருக்கு தெரியப்படுத்துமாறு கூறி வருகிறார்கள்.
கேரளா எல்லைப் பகுதியான மஞ்சூர் காவல் நிலையத்தை சுற்றி பாதுகாப்புக்காக மணல் மூட்டைகளை அடுக்கியும், நான்கு புறமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம், இரவில் அதிக ஒளிதரும் விளக்குகள் வைத்து கேமரா பதிவுகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள் என்று கூறினார்.




