கூடுவாஞ்சேரி கோயிலில் ஆளுநர் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

Published:

governor - 2026சென்னையின் புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்தார்.

சென்னை கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் உள்ள மாமரத்து சுயம்பு சித்த விநாயகர் ஆலயம் இந்தப் பகுதியில் புகழ்பெற்றது. இங்கே நேற்ற்று ஆளுநர் வருகைக்காக  சிறப்பு வழிபாடுகளுடன் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

governor2 - 2026

இந்த வழிபாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாகச் சொல்லி, அர்ச்சனை செய்யச் சொன்னார். பின்னர் தாமே தூப தீப ஆரத்தி எடுத்து, விநாயகருக்கு வழிபாடு நடத்தினார்.

முன்னதாக ஆலயத்தின் சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் வழிபாடு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர்  திரளாக வந்திருந்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img