திருப்பூர்: திராவிடர் கழகத்தைத் துவங்கிய ஈ.வே.ராமசாமி நாயக்கரின் 140வது பிறந்த நாள் தமிழகத்தில் இன்று அனுட்டிக்கப் பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஈவேரா., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை தீவுத்திடல் பூங்காவில் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் 6 அடி உயர வெண்கலச் சிலை மீது செருப்பு வைக்கப் பட்டிருந்தது.
மர்மநபர்கள் ஈவேரா சிலையின் தலைமீது ஒரு ஜோடி செருப்புகளை வைத்தும் கல்லால் அடித்தும் சென்றுள்ளனர். இதை அடுத்து ஈவேரா சிலைக்கு அவமரியாதை செய்ததாகக் கூறி, திக, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவுதிடல் ஈவேரா., சிலைமுன் குவிந்தனர். இதை அடுத்து அங்கே வந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.