சென்னை: நீதித்துறை மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாகக் கூறி ஹெச்.ராஜாவை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட முடியாது என்று கூறியுள்ளது உயர் நீதிமன்றம்.
புதுக்கோட்டை அருகே திருமயம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹெச்.ராஜா, நீதிமன்றம் குறித்தும் காவல் துறையினர் குறித்தும் அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. எனவே, ஹெச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது உயர் நீதிமன்றம்.
இதனிடையே, பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் அவரது வீட்டுப் பெண்களை அவதூறாகப் பேசியதாகக் கூறி, அதனைக் கண்டித்து திண்டுக்கல்லில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹெச் ராஜாவின் உருவப்படத்திற்கு மை ஊற்றி அழிக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.




