இன்று காலை எம்.எல்.ஏ கருணாஸ் கைது செய்யப் பட்டார். அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் தன் கைது குறித்து அவர் பேசினார்.
அப்போது அவர், சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப் பட்டுள்ளது.
நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்.
எங்களை போன்றவர்களை அரசு வேண்டுமென்று திட்டமிட்டு கைது செய்து வருகிறது.
சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால், சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும், ஆனால் அனுமதி வாங்கினார்களா என தெரியவில்லை.
பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
நீதிமன்றத்தில் இந்த வழக்கை சந்திப்பேன் என்று கைதுக்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாஸ் கூறினார்.




