மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை துணைத் தலைவா் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
புழல் சிறையில் பயங்கரவாத கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலமானது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் தலைமையில் கண்காணிப்பாளர் முன்னிலையில் சோதனை நடைபெற்றது.
இதில் துணை ஆணையர் அருண் கோபால், கிருஷ்ணன், உதவி ஆணையர் வெற்றி செல்வம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளா்கள் , சிறை அலுவலா்கள் உள்ளிட்ட 187 போலீசார் காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை சிறைச் சாலையில் உள்ளே சோதனை நடத்தினா்.
மதுரை மத்திய சிறையில் உள்ள பெண் கைதிகள் உட்பட 1300 கைதிகளின் அறைகள் மற்றும் வளாகங்கள், உணவு தயாரிக்கும் பகுதிகளில், கைதிகள் மற்றும் சிறை அலுவலர்கள் பயன்படுத்தப்படும் அறைகள் உள்ளிட்டவைகளில் சோதனை நடைபெற்றது.
சோதனையில் சிறைக்கு புறம்பான தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் கைப்பற்றப் படவில்லை. சிறிய ஆணித் துண்டுகள் 2, சேவிங் ரேஷர் பிளேடு உடைந்த நிலையில் -1, சூட்கேஸ் கட்டும் சிறிய செயின் – 1, இரும்பு குண்டுகள் – 2ஆகியவை கைப்பற்றப்பட்டன.




