சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறினார் கருணாஸ்.
கைது செய்யப்பட்டபோது செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
என் மீதான வழக்கை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வேன்.
என்னை கைது செய்ய சபாநாயகரிடம் காவல்துறை அனுமதி பெற்றதா என தெரியவில்லை.
பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் சட்டத்தை மதிப்பவன் நான்.
கொலை முயற்சி வழக்கு போடும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை என்று அவர் கூறினார்.




