செங்கோட்டை ரயில் நிலையத்தில் பெரியபிள்ளை வலசை ஊராட்சி சார்பில் ரயில் பயணிகளுக்கு துணி பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றலும் ஒழிக்கும் விதமாக, பெரியப்பிள்ளை வலசை ஊராட்சி சார்பில் மகளிர் சுய உதவி குழுவினர்கள் தயாரித்த துணிப்பைகளை ரயில் பயணிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்த சாரதி, சண்முகநாதன் ஆகியோர் தலைமை தாங்கி ரயில் நிலைய மேலாளர் ராஜுவிடம் துணி பைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் உதவி ஆய்வாளர் மனோகரன்
ஊராட்சி செயலாளர் செல்லப்பா மற்றும் ஊராட்சி தூய்மை காவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.




