தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஓஜிஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் தட்டாரப் பட்டி. இக்கிராமத்தில் சுமார் 1500 பேர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் CCTV கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கம் போல் கோவில் பூசாரி முனுசாமி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் பூசை செய்துவிட்டு, நேற்று 6ஆம் தேதி இரவு கோவிலை பூட்டி விட்டு விட்டிற்கு சென்றார்.
7ம் தேதி இன்று காலை வழக்கம் போல கோயிலைத் திறக்க காலை 6 மணிக்கு வந்தார். ஆனால், கோவிலுக்கு வந்தவர் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார். உடனே, ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்து பார்த்தார்.
அப்போது மாரியம்மன் கழுத்திலிருந்த சுமார் 6 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. உடனடியாக ஊர் கவுன்டர் ராஜா. மந்திரி கவுன்டர் அரியாகவுன்டர். பெரியனணன் பூசாலி முனுசாமி ஞான பிரகாசம் ஆகியோர் பாப்பாரப்பட்டி காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து CCTV கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, திருடனை தேடி வருகின்றனர்
இது குறித்த காணொளிக் காட்சி (வீடியோ பதிவு…)




