தென்காசி அருகே உள்ள கடையத்தில் அரசு கேபிள் டிவிக்கு வயர் கொண்டு செல்ல இரும்பு கம்பி நட்டும் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கடையம் பகுதியில்
அரசு கேபிள் ஒயர் கொண்டு செல்ல ஒப்பந்த ஊழியர்கள் பாலமுத்து, சுகுமார், ராமர் ஆகிய 3 பேர் சாலையில் இரும்புக்கம்பி நட்டி கொண்டிருந்தனர். அப்போது கேபிள் ஒயர் எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசி மின்சாரம் தாக்கியது.
மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த பாலமுத்து ஒப்பந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த சுகுமார், ராமர் ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.