
ஆயிரம்தான் பகுத்தறிவு பேசினாலும், ஹிந்துக் குடும்பத்தில் வந்ததால் குடும்ப பாரம்பரியப் படி, ஹோமம் வளர்த்து ஹிந்துக்கள் புனிதமாக போற்றும் திருக்கடவூரில் ஹிந்து மத வழக்கப் படி, 60 வயது நிறைவை ரகசியம் எதுவுமில்லாமல், வெளிப்படையாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன். அதற்காகவே அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேடையில் அடுத்தவரின் தாலியை அறுப்பதுதான் திராவிடக் கொள்கை என்று நிலைநாட்டப் பட்டு விட்ட இந்நாளில், திராவிடக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் குடும்பமான மறைந்த திமுக அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப் பாண்டியன், தனது 60 ஆம் ஆண்டு திருமண நிறைவு விழாவை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி திருக்கோவிலில் ஹோமம் வளர்த்து, ஹிந்து மத சடங்குகளைச் செய்து, முறைப்படி நடத்திக் கொண்டார்.

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் எனும் புனை பெயரால் அறியப்படும் சுமதி, திமுக., குடும்ப பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில், கனிமொழி, தமிழச்சி என பெண் கவிஞர்களை மேடையேற்றி வளர்த்தது திமுக. கனிமொழியும், தமிழச்சியும் மிக நெருக்கமாக இருந்து வந்தவர்கள். கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கம். திமுக., ஆட்சியில், தமிழக வணிகவரித் துறை அமைச்சராக இருந்த தங்கப்பாண்டியனின் மகள் இவர். தமிழக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி.
சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற தமிழச்சியின் கணவர் சந்திரசேகர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.
இப்படி திமுக., பாரம்பரியத்தில் வந்த தமிழச்சி, திமுக., மகளிரணியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். ஒருபுறம் கனிமொழி திருப்பதி உண்டியலில் கண்வைத்தவராய் மேடையில் பேசுகிறார். ஆனால் வீட்டிலோ பூஜையறைக்கு குறைவில்லை! வெளிப்படையாக அவர் போல் தெய்வ நிந்தனைகளைச் செய்யாவிட்டாலும், தான் பகுத்தறிவுப் பாசறையில் இருந்தாலும், தன் குடும்பம் ஒரு ஹிந்துக் குடும்பம் என்பதைக் காட்டும் வகையில், தமிழச்சி தனது 60 ஆம் கல்யாண நிகழ்வை திருக்கடவூர் அபிராமி கோயிலில் கொண்டாடியது ஹிந்து உணர்வு கொண்ட பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.




எலà¯à®²à®¾ மே வேஷம௠தானà¯.பொத௠வாழà¯à®•à¯à®•ை வேற௠நிஜ வாழà¯à®•à¯à®•ை வேறà¯