தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் டிஎன்பிஎஸ்சியை இழுத்து மூடுங்கள் என்று பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் தெருவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: குரூப்-2 தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் போட்டி தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்கு வெட்கப்பட வேண்டும். தமிழில் வினாத்தாள்களை தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தை மூடிவிடலாம்.
தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வை நடத்த வேண்டும். சில நாட்களில் அறிவிப்பு வெளியிடாவிட்டால் பாமக மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பாம.க தலைவர் மருத்துவர் ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



