கஜா புயல் எதிரொலியாக, திருச்சி-ராமேஸ்வரம்- திருச்சி பயணிகள் ரயில் மற்றும் மதுரை-ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கஜா புயல் வலுவடைந்து வரும் நிலையில், நாகை மாவட்ட நிர்வாகம்
38 கிராமங்களைச் சேர்ந்த 87ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. நாகையில் கடல் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப் படுவதாக நாகை மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இதனிடையே, கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக்காக 32 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை, கஜா புயல் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு
பிறப்பித்துள்ளது. கடலூர் – ககன்தீப் சிங் பேடி, நாகை – டி.ஜவஹர், புதுக்கோட்டை – சம்பு கல்லோலிக்கல், ராமநாதபுரம் – சந்திரமோகன், திருவாரூர் – மணிவாசன் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.